‘‘போராட்டக்காரர்களை அடக்குவதற்கு அவர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வழக்கு களில் போராட்டக்காரர்களுக்காக ஆஜரான சட்டத்தரணிகள் தற்போது அமைச்சர்களாகவும் இருக்கின்றனர்.
எனவே, நாட்டில் இடம்பெற்ற போராட்டத் தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தொடுக்கப் பட்டிருக்கும் வழக்கு விசாரணை களை அரசாங் கம் விரைவாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (27) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,
‘‘போராட்டக்காரர்களை அடக்குவதற்கு அவர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகளில் போராட்டக்காரர்களுக்காக ஆஜரான சட்டத் தரணிகள் தற்போது அமைச்சர்களாகவும் இருக்கின்றனர். நாட்டில் இடம்பெற்ற போராட் டத்தின் பின்னணியிலேயே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதனால் இது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்குகள் தொடர்பில் சட்ட மா அதிபருக்கு அறிவிக்க வேண்டும். அல்லது இந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த அரசாங்க காலத்தில் ஆயிரக்கணக் கானவர்கள் வீதிக்கிறங்கி போராட்டம் மேற்கொண்டு, தங்களுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடிக்கு தீர்வுகாணுமாறு அப்போது இருந்த அரசாங்கத்திடம் கோரி வந்தனர். தற்போது அவர்கள் நீதிமன்றங்களில் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். அது மாத்திரமல்லாது அவர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தடைசெய்யப்பட்டு, அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசாங்கம் இவர்களுக்கு நியாயம் வழங்கும் வகையில், அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு விசாரணைகளை விரைவாக முன்னெடுத்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’’ என்றார்.