நோக்கியா நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பெக்கா லண்ட்மார்க் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக இன்று (10) அறிவித்துள்ளார்.
அந்தவகையில் மார்ச் 31ஆம் திகதி பெக்கா லண்ட்மார்க் பதவி விலகுவதாகவும், அதனைத்தொடர்ந்து இந்த வருட இறுதிவரை புதிய தலைவரின் ஆலோசகராக பெக்கா லண்ட்மார்க் செயற்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நோக்கியா நிறுவனத்தின் புதிய தலைவராக ‘இண்டெல்’ நிறுவனத்தின் ஜஸ்டின் ஹோடார்ட் ஏப்ரல் 1ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளார்.
“நோக்கியாவின் வளர்ச்சிக்காவும் மதிப்புக்காவும் அந்நிறுவனத்தின் திறனை அதிகரிக்கச் செய்வதற்காகவும் அதனுடன் பயணம் தொடருவதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதாக” ஜஸ்டின் ஹோடார்ட் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்