Our Feeds


Thursday, February 27, 2025

Sri Lanka

எகிப்து தூதுவர் - ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் அஹமட் இப்ராஹிம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை மற்றும் எகிப்துக்கு இடையில் நீண்ட காலமாக காணப்படும் நட்புறவை பலப்படுத்துவது தொடர்பிலும் இருநாட்டு சுற்றுலா மற்றும் முதலீட்டு துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மத்திய கிழக்கு வலயத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, எகிப்து அரபு குடியரசு தூதரகத்தின் ஆலோசகர் மொஹமட் மாதி ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »