Our Feeds


Sunday, February 16, 2025

Zameera

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் நியமனம்


 இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் பதவி விலகிய நிலையில் துணைப்பொதுச்செயலாளரான எம்.கே.சுமந்திரன் பதில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று (16) பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் நடைபெற்றது

 

இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

 

இதன்போது உயிரிழந்த தமிழரதசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பதில் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »