சந்தையில் கீரி சம்பா அரிசி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் அதிகாரசபைக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட வர்த்தகர்களைத் தேடுவதற்குரிய சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிக விலை நிர்ணயம் தொடர்பாக நுகர்வோர் அதிகாரசபை 3,177 சோதனைகளை நடத்தி 46 மில்லியன் ரூபா அபராதம் வசூலித்துள்ளது.
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக 24 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
39 விற்பனையாளர்கள் மீது அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதோடு, மேலும் கேகாலை பகுதியில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த இரண்டு தனியார் நிறுவனங்களையும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.