அமெரிக்காவின் மூன்று மிகப்பெரிய வர்த்தகபங்காளி நாடுகளான சீனா கனடா மெக்சிக்கோ ஆகியவற்றிற்கு எதிராக புதிய வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சீனா மெக்சிக்கோ கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்திற்கும் புதிய வரிகளை டிரம்ப் அறிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை முதல் கனடாவிலிருந்தும் மெக்சிக்கோவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களிற்கும் எதிராக 25 வீத வரியை விதிக்கப்போவதாக அறிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கு எதிராக 10 வீத வரியை விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.