Our Feeds


Friday, March 7, 2025

Zameera

அமெரிக்காவில் 80,000 அரசு பணியிடங்கள் இரத்து


 அமெரிக்காவில் 80,000 அரசு பணியிடங்களை இரத்து செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


கடந்த ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் 'அரசு செயல் திறன்' (டிஓடிஜி) என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் பதவி வகிக்கிறார்.


டிஓடிஜி துறையின் பரிந்துரைகளின்படி அமெரிக்க அரசின் செலவினங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கான துறையில் 80,000 அரசு பணியிடங்களை இரத்து செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.


இந்த துறையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த துறைக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 


ஜனாதிபதி ட்ரம்பின் முடிவுகள் குறித்து ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »