Our Feeds


Friday, March 7, 2025

Zameera

தேசபந்து தென்னக்கோனுக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு நிறுத்தம்


 மாத்தறை நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னக்கோனுக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிறுத்தி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தேசபந்து தென்னக்கோனின் பாதுகாப்பு மற்றும் பிற சலுகைகளை நீக்கக் கோரி, ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்தித குமநாயக்கவினால் பொலிஸ் தலைமையகத்திலிருந்து வுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


 தேசபந்து தென்னகோனுக்கு உத்தியோகபூர்வ இல்லம், உத்தியோகபூர்வ மோட்டார் வாகனம், அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டன.


வெலிகமவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை கைது செய்யச் சென்றபோது, ​​வெலிகம பொலிஸாரால் அதிகாரிகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் மோதலில் கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ் சார்ஜன்ட் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மாத்தறை நீதவான் நீதிமன்றம் அப்போதைய பொலிஸ் மா அதிபர் அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.


அந்த உத்தரவை மீறி , தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தைத் தவிர்த்து வருவதாகவும், அவரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


 தேசபந்து தென்னகோனின் கையடக்கத் தொலைபேசித் தகவல்கள் மற்றும் அவர் இருக்கும் இடம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேர்ர்ரு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »