Our Feeds


Monday, March 10, 2025

Sri Lanka

பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் சமல் ராஜபக்ஷ!


முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இலங்கை பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார். 

இன்று கட்சிக்குள் சிறந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். 

அனைவரின் வேண்டுகோளின்படி தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும், அதன்படி, மாவட்டத்தில் எந்த இடத்திலிருந்தும் போட்டியிட முடியும் என்றும் சமல் ராஜபக்ஷ கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »