கட்டுநாயக்க விமான நிலையத்தில், ரூ.175 மில்லியன் மதிப்புள்ள "ஹேஷ்" போதைப்பொருளை தனது சூட்கேஸில் மறைத்து கொண்டு சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் 20 வயதான கனேடிய இளங்கலை மாணவியானவர்.
கனடாவின் டொராண்டோ நகரிலிருந்து அந்த பெண் போதைப்பொருளுடன் அபுதாபி வழியாக இரவு 8.35 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-396 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த சூட்கேஸில் 17 கிலோகிராம் 573 கிராம் ஹேஷ் போதை பொருளை 03 போர்வைகளில் சுற்றி மறைத்து வைத்திருந்தார். இதை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி அவர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.