மின்சார சபையின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது ,எரிசக்தி துறையில் நிலையான மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
எரிசக்தி பாதுகாப்பு தொடர்பிலும் ,தொடர்ச்சியான எரிசக்தி விநியோகம் மற்றும் எரிசக்தி துறைக்கு அமைவாக தற்போதைய மற்றும் எதிர்பார்ப்பு நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
இச்சந்திப்பில் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, உள்ளிட்டவர்களுடன் மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்லாபிட்டிய உள்ளிட்ட மின்சார சபையின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Wednesday, March 5, 2025
மின்சார சபையின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »