Our Feeds


Friday, March 14, 2025

Zameera

இரு சகோதரிகள் வெட்டிக் கொலை


 மூதூர் - தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.


திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மூதூர் தாஹா நகர் பகுதியில் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது கணவர் வெளிநாட்டில் வசித்து வருபவர் எனவும் சிறிதரன் ராஜேஸ்வரி (68வயது) மற்றும் அவரது பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி (74வயது) ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் உயிரிழந்த சிறிதரன் ராஜேஸ்வரி என்பவரின் 15 வயது மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த கொலை சம்பவத்தில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »