அல்ஜசீராவின் மெஹ்தி ஹசனுடனான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்ச்சைக்குரிய நேர்காணலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை நியாயப்படுத்தியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்த பேட்டியை ஊடகவேடமிட்டு நடத்தப்பட்டதாக்குதல் என குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக பதிவில் அலிசப்ரி மேலும் தெரிவித்துள்ளதாவது
நான் மெஹ்தி ஹசனை முன்னரும் பார்த்திருக்கின்றேன்,அவர் எப்போதும் மோதல்போக்கை கொண்ட ஆக்ரோஷமானவராக காணப்படுவார்.
ரணில்விக்கிரமசிங்க உடனான அவரது நேர்காணால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.
இது பதில்களைபெறுவது பற்றியது அல்ல. இது ஊடகத்துறை தொடர்பானது இல்லை. இது நிகழ்ச்சிநிரல் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பானது இது தாக்குவதை நோக்கமாக கொண்ட ஒரு நேரடி விசாரணை.
பேட்டி வழங்குபவருக்கு எதிரியின் பகுதிக்குள் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்காகஇலங்கை எதிர்ப்பு உணர்வு கொண்ட பார்வையாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
நியாயமான விதத்தில் கடுமையான கேள்விகளை கேட்பதற்கான வழிமுறைகள் உள்ளன.
அதற்கு பதில் மெஹ்தி பதில்கள் குறித்து கூச்சலிட்டார்,விளக்கங்களை துண்டித்தார்,மேலும் தனது சொந்த சொல்லாடலிற்கு ஏற்றவாறு வார்த்தைகளை திரித்தார். பதில்கள் தனது விருப்பத்திற்கு ஏற்ப இல்லாவிட்டால் அவர் செவிமடுக்க மறுத்தார்.
அவர் எப்படி செயற்படுவார் என நான் பார்த்திருக்கின்றேன் ஆனால் உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்களை அவர் இவ்வாறு கையாள்வாரா என்ற கேள்வி எழுகின்றது. அவர்களின் யுத்த குற்றங்கள்,அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்து இதேயளவு ஆக்ரோசத்துடன் விமர்சிப்பாரா?
அல்லது நம்மை போன்ற சிறிய நாடுகளின் தலைவர்களிற்காக இது ஒதுக்கப்பட்டுள்ளதா?
எவரும் இலங்கை தவறுகள் அற்றது என தெரிவிக்கவில்லை, நாங்கள் பூர்த்தி செய்யவேண்டிய வேலை உள்ளது நாங்கள் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும், பொறுப்புக்கூறலை முன்னெடுக்கவேண்டும்,ஆனால் இது எங்களின் போராட்டம்.
இலங்கை மக்கள் தங்கள் எதிர்காலங்களை தாங்களே தீர்மானிப்பார்கள் நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் ஊடகவியலாளர்களோ தெரிவு செய்யப்பட்ட ஆய்வுடன் கூடிய சர்வதேச ஊடகமோ இல்லை.