ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” செயலணி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
"கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
சமூக, சுற்றாடல் மற்றும் ஒழுக்கநெறி விழிப்புணர்வு மூலம் சமூகத்தை சிறந்த நிலைக்கு உயர்த்தும் நோக்கத்தை அடைய, கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தைத் திட்டமிடுதல், வழிநடத்தல் மற்றும் செயற்படுத்துதல் கிளீன் ஸ்ரீலங்கா செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, செயலாளரும் ஏற்பாட்டாளருமான ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க, பதில் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, உள்ளிட்ட“கிளீன் ஸ்ரீலங்கா” செயலணியின் உறுப்பினர்கள், ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான கபில ஜனக பண்டார மற்றும் ரோஷன் கமகே மற்றும் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
Saturday, March 8, 2025
“கிளீன் ஸ்ரீலங்கா” செயலணி உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »