சமூகத்தில் பெண்ணாக ஆணுக்கும், ஆணாகப் பெண்ணுக்கும் மரியாதை கொடுக்கும் போது இந்த உயர்ந்த மனித தத்துவங்களை அடைய முடியும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக் கொள்ளும் சமுதாயத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
இதனை நாம் கையாளாத பட்சத்தில் இந்த சமுதாயத்தில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவோம் என அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“உலகம் முழுவதும் வேலை பார்க்கும் இடங்களில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய வரலாறு உண்டு. அதன் மூலம்தான் மகளிர் தினம் வெற்றி பெறுகிறது. வாழ்வாதாரத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்யும் பெண்களின் இடம், சலுகைகளைப் பெறுவதில் எப்போதுமே கேள்விகள் இருந்து வருகின்றன. சலுகைகளை அனுபவிப்பதில் பெண்களுக்குச் சமமற்ற இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறை, பெண்களுக்கு உணர்திறன் வாய்ந்த பாதீட்டை நாங்கள் வழங்கியுள்ளோம்.
இம்முறை தேசிய வேலைத்திட்டமாக மகளிர் வாரம் ஒன்றை பிரகடனப்படுத்தியுள்ளோம். பெண் பிள்ளைகள் உட்பட அனைத்து பெண்களும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும். அதனால் இந்த வாரம் முழுவதும் பெண்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்கள், உரிமைகள் தொடர்பான விளக்கமளித்தல்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். ” என்று அமைச்சர் சரோஜா போல்ராஜ் கூறினார்.