முன்னாள் இராஜங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தலைமறைவாகியுள்ளார்.
அரச காணியொன்றை சட்டவிரோதமாக விற்ற விவகாரத்தில் விசாரணைக்கு வருமாறு விடுக்கப்பட்ட பொலிஸ் அழைப்பை அவர் ஏற்கவில்லை.இதனையடுத்து சி.ஐ.டி யினர் அவரது இல்லத்திற்கு சென்றபோது அவர் அங்கு இல்லை.அவரின் தொலைபேசி சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வீட்டாரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ள பொலிஸ் ,அவரை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே கனேமுல்ல சஞ்சீவவின் கொலை சந்தேகநபர் செவ்வந்தி , முன்னாள் பொலி மா அதிபர் தேசபந்து ஆகியோர் தலைமறைவாகியுள்ள நிலையில் இப்போது அந்த பட்டியலில் ரணவீரவும் இணைந்துள்ளார்.