இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இலங்கை இந்தியாவுக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது என்றெல்லாம் கூறப்படுகிறது.
விசேடமாக பாதுகாப்பு ஒப்பந்தங்களை எடுத்துக்கொண்டால் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது.
அந்த அடிப்படையிலே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.