Our Feeds


Wednesday, April 9, 2025

Zameera

சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!


 ஜனாதிபதி செயலகத்தில் நாளைய தினம் கூடவுள்ள சர்வகட்சி மாநாடு குறித்து ஜீவன் தொண்டமான் எம்.பி கருத்து வெளியிட்டுள்ளார்.


ஜனாதிபதி செயலகத்தில் நாளைய தினம் இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் கலந்துக்கொள்ளவுள்ளார்.

 

ஜனாதிபதி தலைமையில் நாளை (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில், அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள புதிய வரி விதிப்பு தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

 

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கையில்,

 

அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள புதிய வரி தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இவ்வாறான மாநாட்டை கூட்டுமாறு எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியிருந்த நிலையில் இந்த சர்வகட்சி மாநாடு நாளையதினம் (10) காலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

இதில் முக்கியமாக அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள வரி தொடர்பில் பெருந்தோட்ட பகுதிகளுக்கு எவ்வாறான தாக்கங்களை செலுத்தும் என்பது தொடர்பில் பார்த்தோமானால், தேயிலை, இறப்பர், இலவங்கப்பட்டை, ஆடை உற்பத்தி போன்ற துறைகளில் தாக்கத்தை செலுத்துவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

பிரதானமாக அமெரிக்கா மற்றும் இலங்கைக்கான தேயிலை, இறப்பர், இலவங்கப்பட்டை, ஆடை ஆகிய பொருட்களின் எற்றுமதி, இறக்குமதி பாதிப்பிற்கு உள்ளாகுமேயானால் தொழிற்துறையும் பாதிப்புக்குள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

குறிப்பாக அமெரிக்கா சந்தைகளில் இறக்குமதி செய்யப்படும் தேயிலை, இறப்பர், இளவங்கப்பட்டை, ஆடை உற்பத்திப் பொருட்களுக்கான அதிகப்படியான வரியினை செலுத்தி பொருட்கள் இறக்குமதி செய்வதனை இறக்குமதி நிறுவனங்கள் தாமதம் கான்பிப்பதால் தேயிலை, இறப்பர், இலவங்கப்பட்டை, ஆடை ஆகிய உற்பத்திப் பொருட்களுக்கான ஏற்றுமதி இலங்கையில் குறைவடையும் இதனால் மேற்குறித்த பொருள் உற்பத்தி நிர்வனங்களின் தொழில் வாய்ப்புகளும் குறைவடையும் சாத்தியம் அதிகரிக்கும் என்பதால் இது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »