இன்று 22 வயது வாலிபர் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட விடயம் பேசுபொருளாகியுள்ளது.
1979 இல் ஜே.ஆர் ஜயவர்தன கொண்டுவந்த ஒரு சட்டம் எனக்கூறிய அவர் இன்று சத்தமிடுபவர்கள் அமைச்சர்களாக இருந்த அரசுகளே அதிகமானவர்களை பயங்கரவாத சட்டத்தை பாவித்து கைது செய்துள்ளார்கள் அப்போது இவர்கள் சத்தமிடவில்லை என கூறினார்.
நாம் பயங்கரவாத சட்டத்தை நீக்க அமைச்சரவையினால் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாம் அதனை நீக்குவதாக எமது விஞ்சாபனத்திலும் கூறி உள்ளோம். மக்களின் தேவைகள் மற்றும் அவர்களுக்கு பிழையாகும் விடயங்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்யவேண்டிய நோக்கம் எமக்கில்லை என அவர் குறிப்பிட்டார்.