Our Feeds


Wednesday, April 23, 2025

Sri Lanka

SLPP வேட்பாளராக இருந்த “டான்” கொல்லப்பட்டது எப்படி? - நேரடி ரிப்போட்



நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான SLPP செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தார்.


நேற்றிரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு  பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


சாலமுல்ல  பகுதியிலுள்ள லக்சந்த செவன தொடர்மாடி வீட்டுத் தொகுதியின் 6வது மாடியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின்போது,  பிரவேசித்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிய வந்துள்ளது.


துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து  அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


டேன் பிரியசாத், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொலன்னாவை நகரசபைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »