Our Feeds


Saturday, May 31, 2025

SHAHNI RAMEES

இலங்கையில் தடை செய்யப்பட்ட 15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் விபரத்துடன் புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது

 

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம், கனேடிய தமிழர் தேசிய அவை மற்றும் டி.வை.ஓ என அறியப்படும் தமிழ் இளைஞர் அமைப்பு ஆகியன இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அத்துடன் எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக் குழு, தேசிய தௌஹித் ஜமாத், ஜமாதே மிலாதே இப்ராஹிம், விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்துபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ளஸ் ஆகியனவும் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »