Our Feeds


Saturday, May 31, 2025

SHAHNI RAMEES

161 சபைகளுக்குரிய உறுப்பினர் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் பிரசுரமாகும்!

 

161 உள்ளூராட்சிமன்றங்களுக்குரிய உறுப்பினர் பெயர் விபரங்களை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கான ஆவணம் அரச அச்சகத் திணைக்களத்துக்கு இன்று அல்லது நாளைய தினம் அனுப்பி வைக்கப்படும். முதல் கட்ட வர்த்தமானி இவ்வாரத்துக்குள் பிரசுரிக்கப்படும்.தாமதமாக கிடைத்த பெயர் பட்டியல் விபரங்கள் இரண்டாம் கட்டமாக வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உள் ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தேர்தல் பிரச்சார செலவினம் தொடர்பான விபரத் திரட்டை  சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட காலவகாசம்  நிறைவடைந்துள்ளது. அத்தாட்சிப்படுத்தப்பட்ட வகையில் விபரங்களை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய  மேலதிக உறுப்பினர் பெயர் பட்டியல் மற்றும் பெண் பிரதிநிதித்துவ பட்டியலை சமர்ப்பிப்பதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட காலவகாசம்  நேற்று நள்ளிரவுடன் நிறைடைந்தது.


161 உள் ளூராட்சிமன்றங்களுக்குரிய உறுப்பினர் பெயர் விபரங்களை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கான ஆவணம் அரச அச்சகத் திணைக்களத்துக்கு இன்று அல்லது நாளைய தினம் அனுப்பி வைக்கப்படும். தாமதமாக கிடைத்த பெயர் பட்டியல் விபரங்கள் இரண்டாம் கட்டமாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும்.

உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானி அறிவித்தலில்  பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் ஒருவார காலத்துக்குள் மாநகர சபை மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகிய பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். அரசியல்  கட்சிகளின் உள்ளக விவகாரங்களில் ஆணைக்குழு தலையிட முடியாது. 50 சதவீத பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் கட்சி மாநகர சபைகளில் ஆட்சியமைக்கலாம் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »