Our Feeds


Wednesday, May 21, 2025

Zameera

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 36 பேர் கைது!


 சட்டவிரோதமாக மீன்பிடி ஈடுபட்ட 36 பேரை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும், மீனவர்கள் பயன்படுத்திய 117 சட்டவிரோத வலைகள், ஒன்பது டிங்கி படகுகள், 3,808 கடல் வெள்ளரிகள், உயர் தொழில்நுட்ப மீன்பிடி உபகரணங்கள், சட்டவிரோத வெடிபொருட்கள் மற்றும் மின் விளக்கு உபகரணங்கள் ஆகியவற்றை சட்டத்தின் முன் நிறுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

 

மட்டக்களப்பு, கொடுமடுவ, திருகோணமலை, சல்லிகோவில், எரக்கண்டி, அலியா தீவு, நந்திக்கடல், கல்லடி, பருத்தித்துறை முனை மற்றும் முல்லைத்தீவு ஆலம்பில் ஆகிய கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் பிடிபட்டனர்.

 

கடந்த 10ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்தக் குழு கைது செய்யப்பட்டது.


 

கைது செய்யப்பட்டவர்களிள் மீன்பிடி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, கோட் பே, முல்லைத்தீவு, மாமுனை, பருத்தித்துறை மற்றும் வாகரை ஆகிய மீன்வள புலனாய்வு அலுவலகங்களுக்கு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »