உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகராக செயல்பட்ட ஆண்ட்ரி போர்ட்னோவ் ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் வைத்து மர்ம நபர்களால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தகவலை ஸ்பெயின் உள்துறை அமைச்சரகம் உறுதி செய்துள்ளது. இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை ஸ்பெயின் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.