இவ்வருடம் ஆரம்பித்து முதல் 5 மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, மே 25 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,006,097 என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் 25ஆம் திகதி வரை மேலும் 109,213 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.