இந்த ஆண்டின் முதல் 04 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 5.5 பில்லியன் அமெரிக்க டொலராக ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 5.5 பில்லியன் அமெரிக்க டொலராக ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (Sri Lanka Export Development Board) தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இது 6.9 சதவீத வளர்ச்சியாகும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த காலப்பகுதியில் பதிவான மொத்த ஏற்றுமதி வருமானம் 5,583.25 மில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.