காசாவில் குறைந்தபட்சம் 40 ஆயிரம் போராளிகள், ராக்கெட் ஆயுதக் கிடங்குகள் மற்றும் சுரங்கப்பாதை வலையமைப்புகள் பலமாக செயல்பாட்டில் இருப்பதாக இஸ்ரேலின் “வாலா” நியுஸ் ஏஜன்ஸி ராணுவ வட்டாரத்தை ஆதாரம் காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
19 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரக்கூடிய காஸா - இஸ்ரேல் யுத்தத்தில் இஸ்ரேல் இதுவரை எவ்விதமான வெற்றிகளையும் அடையவில்லை என்பதுடன் பொதுமக்களை கொன்று குவித்து, நாட்டின் அனைத்து கட்டிடங்களையும் அழித்தொழித்துள்ளது.
பாலஸ்தீன விடுதலை ராணுவத்தினரினால் கைது செய்யப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை மீட்ப்பது, பாலஸ்தீன விடுதலை அமைப்பை அழிப்பது மற்றும் காஸாவில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்குவது ஆகிய மூன்று முக்கிய இலக்குகளுடன் காஸாவுக்குள் தரைப்படை நடவடிக்கைகளை ஆரம்பித்த இஸ்ரேலினால் இந்த மூன்று இலக்குகளில் ஒன்றைக் கூட இதுவரை அடைய முடியவில்லை.
19 மாதங்களுக்கும் மேலான யுத்தத்தில் இதுவரை காசாவில் போராளிகள் ஆழமாக வேரூன்றியுள்ளனர். என்றும் உச்சகட்ட பதிலடி தாக்குதல்களை இஸ்ரேல் மீது நடத்துகிறார்கள் என்றும் இஸ்ரேலிய செய்திச் சேவையான “வாலா” அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் இடைவிடாத தாக்குதல்கள் இருந்தபோதிலும் பொதுமக்களை ஆபத்தில் ஆழ்த்த விருப்பமில்லாமல் ஒழுங்கமைக்கப்பட்டு ஹமாஸ் செயல்படுகிறது என்றும் இஸ்ரேல் ஒப்புக்கொள்கிறது.
இஸ்ரேலிய இராணுவத்தின் மதிப்பீட்டை விவரிக்கும் ஒரு அறிக்கையை - இஸ்ரேலிய நியுஸ் ஏஜன்ஸியான “வாலா” திங்களன்று வெளியிட்டது.
காசா, கான் யூனிஸ் மற்றும் மத்திய அகதி முகாம்களில் குவிந்துள்ள "விரிவான சுரங்கப்பாதை அமைப்புகள் அனைத்தும் அப்படியே இருப்பதாகவும் அது மேலும் விபரித்தது.
சுமார் 40,000 ஆயுதமேந்திய போராளிகள் இன்னும் காசாவில் இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் மதிப்பிடுகிறது.
இஸ்ரேலிய இராணுவம் தீவிர குண்டுவீச்சு, தரைவழி ஊடுருவல்கள் மற்றும் பெருமளவிலான இடப்பெயர்ச்சி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
ஹமாஸ் இன்னும் "பலமான ராக்கெட்டுகளை" வைத்துள்ளது, ஆனால் பொதுமக்கள் மீதான அக்கறை காரணமாக அவற்றை ஏவுவதைத் தவிர்த்து வருவதாக அறிக்கை மேலும் கூறியது.
நடந்து வரும் தாக்குதலில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு தமது தலைவரை இழந்துள்ள நிலையிலும் இஸ்ரேலை எதிர்த்து பலமாக போராடி வருவதுடன் 600 நாட்களாகியும் காஸாவின் சிவில் அரசாங்கத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்நிலையில் பாலஸ்தீனத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக அமெரிக்கா - பாலஸ்தீன விடுதலை அமைப்பு நடத்திய சமாதான பேச்சுக்கள் வெற்றியடையும் வாய்புள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.