Our Feeds


Saturday, May 31, 2025

SHAHNI RAMEES

தமிழ்நாடு அகதி முகாமிலிருந்து தாயகம் திரும்பியவர் கைது! - நடந்தது என்ன? அமைச்சர் பிமல் விளக்கம்




சட்டபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு

வெளியேறியவர்களை கைதுசெய்ய பயன்படுத்தப்படும்  சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அகதி முகாமிலிருந்து தாயகம் திரும்பியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


தனது சமூக ஊடக பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-


சட்டபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியவர்களிற்கு எதிராக பயன்படுத்தப்படும் சட்டத்தின் அடிப்படையிலேயே தமிழக அகதி முகாமிலிருந்து நாடு திரும்பிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


தொடர்புபட்டவர்கள் இது குறித்து செயற்பட்டிருந்தால் யுத்தத்தின் பின்னர் இந்த சட்டத்தை மாற்றியிருக்கலாம்.



அமைச்சர் ஆனந்த விஜயபாலவுடன் கதைத்தேன் அவர் இந்த சட்டத்தை மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.



இது அரசாங்க கொள்கையில்லை,நாட்டின் பழைய சட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


நானும் அமைச்சர் சந்திரசேகரும் 2007 2008 இல் அந்த அகதிமுகாம்களிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தோம்,

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »