“எந்த அரசாங்கமாக இருந்தாலும், இது நமது நாட்டிற்கு கிடைத்த வெற்றி. இதில் நாம் பாசாங்கு செய்யக் கூடாது,” என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
நீதித்துறை உரிய தண்டனைகளை வழங்குவது பாராட்டப்பட வேண்டிய விடயம் எனக் குறிப்பிட்ட அவர், இதற்கு சாதகமான சூழலை உருவாக்கிய ஜனாதிபதி அனுராவுக்கு நன்றி தெரிவித்தார்.