Our Feeds


Friday, May 16, 2025

ShortNews

ஈரானுக்கு புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா? அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா? - ட்ரம்ப் மீண்டும் அலப்பறை!

 

 

 ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்தவரை, புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா என்பதை அந்நாடு முடிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், கட்டார் தலைநகர் தோஹா சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மன்னர் (அமிர்) தமீம் பின் ஹமாத் அல் தானியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

இதன் போது ட்ரம்ப் கூறுகையில், "ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்வது அல்லது வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வது என இரண்டு தீர்வுகள் மட்டுமே அந்நாட்டுக்கு உள்ளன.

 

ஈரான், அமீரைப் பெற்றிருப்பது அதன் அதிர்ஷ்டம். ஏனென்றால் அவர் உண்மையில் அவர்களுக்காகப் போராடுகிறார். ஈரான் மீது நாம் ஒரு கொடூரமான தாக்குதல் நடத்துவதை அவர் விரும்பவில்லை. அவர், 'நீங்கள் ஒரு ஒப்பந்தம் செய்யலாம்' என்று கூறுகிறார். ஈரான் அமீருக்கு ஒரு பெரிய நன்றி சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று ட்ரம்ப் கூறினார்.

 

இதேவேளை ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக இராஜதந்திர ஒப்பந்தத்துக்கு கட்டாரின் ஆளும் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அழுத்தம் கொடுத்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »