Our Feeds


Wednesday, May 28, 2025

Zameera

நோர்வூட் பிரதேச செயலகம் இடமாற்றப்படாது


 


"நோர்வூட் பிரதேச செயலகம் இடமாற்றப்படாது! எம்.பி ஜீவனிடம் தெரிவிப்பு."


நோர்வூட் பிரதேச செயலகம் ஹட்டன் நகரிற்கு இடமாற்றம் செய்யப்படாமல் தற்போது நடைமுறையில் இருக்கும்  கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களிடம், நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் தெரிவித்தார்.


நோர்வூட் பிரதேச செயலக, பிரதேச ஒருங்கினைப்புக் குழு கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது.


நோர்வூட் பிரதேச செயலக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஹட்டன் - டிக்கோயா நகர சபை மண்டபத்தில்(டிக்கோயா) இன்றைய தினம்(27) இடம்பெற்றிருந்தது.


மேலும் இன்று நடைபெற்ற நோர்வூட் பிரதேச செயலக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றிய ஜீவன் தொண்டமான் பின்வருமாறு கருத்து வெளியிட்டிருந்தார்.


குறிப்பாக நிலவிவரும் சிறுநீரக நோய் தாக்கதிற்கான வைத்திய சேவைகளை வழங்குவதற்காக வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறைகள் நிலவுவதால் அதனை விரைவில் நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுட்டிக்காட்டிருந்தார். 


அத்தோடு நாங்கள் கவணித்த பிரதான விடயம் நிறைய பாடசாலைகளில் மலசலக்கூட வசதிகள் இல்லை. இதனை நாங்கள் உலக வங்கியின் ஆவணங்கள் மூலம் கண்டரிந்திருந்தோம். மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான இந்த போதைப்பொருள் பிரச்சசினை 2021 இல் மலையகத்தில் ஒரு பாரிய போதை பொருள் பிரச்சினையாக நடந்து கொண்டிருக்கும் போது நாங்கள் காவல்துறை இன் ஊடாக ஒரு நடவடிக்கை எடுத்திருந்தோம். 


அதாவது ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒவ்வொரு கண்கானிப்பு குழு ஒன்று வைப்போம். அதில் கட்டாயமாக ஒரு பெண் போலீஸ் உம் இருப்பார் ஆண் போலீஸ் உம் இருப்பார். அந்த செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தால் இந்த பிரச்சினையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும். 


இரண்டாவது விடயம் போலீசார் நினைத்தால் விழிப்புணர்வு நிகழ்வுகள் செய்ய முடியும். மாதத்திற்கு இரண்டு பாடசாலைகளை சரி முறையே செய்தால் கூட ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். 


அதேபோல் உண்மையான விடயம் என்னவென்றால் 50 வீடுகளுக்கு 2 போலீஸை வைப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. காரணம் மக்கள் சுதந்திரமாக வாழ்பவர்கள், போதை பொருள் பிரச்சினையை தடுப்பதற்கு பல்வேறு மாற்று வலிகள் உள்ளன. 


மேலும்  எங்களது கோரிக்கையை ஏற்று நோர்வூட் பிரதேச செயலக இடமாற்றத்தை நிறுத்தியமைக்காக  இந்த நேரத்தில் அரசங்கத்திற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.


நோர்வூட், மஸ்கெலியா, ஹட்டன் ஆகிய பகுதிகளில் பேசப்பட்ட முக்கியமான பிரச்சினைதான் வீடு திட்டம் சம்பந்தமானதாகும். குறிப்பாக தோட்ட புறங்களில் வேலை செய்வதற்கு நோக்கங்கள், வளங்கள், நிதி ஒதுக்கீடு இருந்தாலும் கூட சட்டமைப்பு பிரகாரம் நமக்கு அனுமதி கிடையாது. அதனால் தான் தோட்ட புற குடும்பங்கள் பின் தங்கி உள்ளன. அதற்கான முக்கியமான காரணம் தோட்ட முகாமையாளர்கள்தான். அவ்வாறு இருக்கும் போது நாம் வேலை செய்ய நினைக்கும் போதும் அவர்கள் சில நிபந்தனைகளை வைக்கின்றனர். ஆகையால் காணிகளை வழங்கும் போது நிறைய மக்களுக்கு அவர்களுக்கான வீடுகளை கட்ட முடியும். அதற்கான முழுமையான ஆதரவு வழங்குவோம். அத்தோடு அதற்கான ஆவனங்கள் அமைச்சில் உண்டு.


நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கினைப்புக் குழு கூட்டத்தில், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், கலைச்செல்வி, ஹட்டன்-டிக்கோயா நகர சபை செயலாளர், மஸ்கெலியா பிரதேச சபை செயலாளர், நோர்வூட் பிரதேச சபை செயலாளர், அரச நிறுவன அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கிராம சேவகர்கள் என பலர் கலந்துக்கொண்டிருந்தார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »