Our Feeds


Wednesday, May 28, 2025

Zameera

இலங்கையில் வயது குறைந்த கர்ப்பம், அதிக போதைப்பொருள் பாவனை , பிள்ளைகள் துஷ்பிரயோகம், அதிக போதைப்பொருள் கடத்தல், மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் அதிகரித்துள்ள பிரதேசமாக கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவு அடையாளம் காணப்பட்டது




 இலங்கையில் உள்ள பிற பிரதேச செயலகப் பிரிவுகளுடன் ஒப்பிடும்போது, ​​கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவு அதிக போதைப்பொருள், துஷ்பிரயோகம் சதவீதம், அதிக போதைப்பொருள் கடத்தல் சதவீதம் மற்றும் வயது குறைந்த கர்ப்பம் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் அதிகரித்துள்ள பிரதேச செயலகப் பிரிவாக, கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக கதிர்காமம் பிரதேச செயலாளர் பிரதீப் குலதிலக கூறுகிறார்.

பின்பர கதிர்காமம் போசன் மண்டலம் -2025 என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டு, பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த கூட்டம், திங்கட்கிழமை (26) நடைபெற்றது.

“எங்கள் அதிகார வரம்பில் ஐந்து பிரிவுகள் உள்ளன. நூற்று நாற்பத்தேழு பாதிக்கப்படக்கூடிய பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், பெற்றோர் ஒருவர் அல்லது இருவரையும் இழந்த பிள்ளைககளும், இரு பெற்றோர்களையும் இழந்த பிள்ளைகளும் அடங்குவர். இந்தக் பிள்ளைகளில் பலர் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் பாடசாலைகளுக்ககுச் செல்லவில்லை. படிக்கவோ எழுதவோ தெரியாத பல பிள்ளைகள் உள்ளனர். இந்தக் பிள்ளைகளை இந்த ஆபத்தான சூழ்நிலையிலிருந்து விரைவில் மீட்பதற்கான ஒரு முறையைத் திட்டமிட வேண்டும். இங்கு கூடியிருக்கும் அனைவரும் இது தொடர்பாக உதவ வேண்டும்.

மேலும், இந்த 147 பிள்ளைகளையும் அவர்களின் இடங்களிலிருந்து அழைத்துச் சென்று ஒரு பராமரிப்பு மையம் நிறுவி தேவையான அனைத்து பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும்.”

போசன் பந்தலை ஏற்பாடு செய்வதற்காக கதிர்காம சஹான சமாஜத்தை நிறுவிய கதிர்காம அபிநவராமய கோயிலின் தலைமைக் குருவான கபுகம சரண திஸ்ஸ தேரர் இந்த நிகழ்வில் பங்கேற்று, இந்த 147 பாதிக்கப்படக்கூடிய பிள்ளைகளில் ஒருவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கண்டுபிடித்து வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

இந்த சூழ்நிலையிலிருந்து பிள்ளைகளை மீட்காவிட்டால், கஞ்சா, போதைப்பொருள், ஐஸ் மற்றும் திருட்டு போன்ற குற்றங்களுக்கு ஆளாகும் ஒரு சமூகம் கதிர்காமத்தில் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் அந்த தேரர் சுட்டிக்காட்டினார். எனவே, பிரதேச செயலாளரின் தலைமையில் தேவையான நிறுவனங்கள் மற்றும் சிவில் ஆர்வலர்களின் ஆதரவுடன் விரைவில் ஒரு தீர்வைக் கண்டுபிடித்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »