பாலஸ்தீனம் என்றென்றும் வாழும் என தெரிவித்துள்ள
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாலஸ்தீனியர்களின் கூட்டு விருப்பம் உலகின் அடிமைப்படுத்தப்பட்ட மக்களிற்கு காலத்தால் அழியாத மற்றும் எல்லையற்ற உலகளாவியற்ற உலகலாவிய எடுத்துக்காட்டாக பிரகாசிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.நக்பாவின் 77 வருடத்தை குறிக்கும் விதத்தில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
எங்களின் மொபைல் சாதனங்களிற்குள் 24 மணிநேரமும் ஏழு நாட்களும் நேரடிஒளிபரப்பு செய்யப்பட்ட முதலாவது இனப்படுகொலையாக விளங்குகின்ற போதிலும்,இந்த படுகொலை 19 மாதங்களாக இடைநிறுத்தப்படாமல் தொடர்கின்றது.
இது நாங்கள் வாழும் காலத்தை பற்றியும் உலக ஒழுங்கிற்கும் அடிப்படையானவை என தெரிவிக்கப்படும் விதிமுறைகள் பற்றியும் என்ன சொல்கின்றது?
காசாவில் தற்போது நடைபெறும் அட்டுழியங்களின் அளவை அறிந்துகொள்வதற்கும் அறியாமல் இருப்பதற்குமான வித்தியாசம் இதுதான்.கண்முன்னால் இடம்பெறும் இனப்படுகொலையின் தீவிர ஆதரவாளர்களாகயிருப்பதா அல்லது படுகொலையின் பார்வையாளர்களாகயிருப்பதா என்பதே எம்முன்னால் உள்ள தெரிவு.
நம்பகதன்மை மிக்க புகழ்பெற்ற லான்செட் போன்ற தரப்புகள் தெரிவிப்பதை விட கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று அல்லது நான்கு மடங்காகயிருக்கலாம்.கொல்லப்பட்டவர்களில் 18000 சிறுவர்களும்,200 பத்திரிகையாளர்களும் 400 நிவாரணபணியாளர்களும் 150 கல்விமான்களும் 1300 சுகாதார பணியாளர்களும் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
காசாவிலும் மேற்குகரையிலும் உட்கட்டமைப்பு முழுமையாக அழிக்கப்பட்டிருப்பது,பாலஸ்தீனியர்களின் கூட்டு தேசிய வாழ்க்கையின் அத்தியாவசிய அடித்தளத்தின் மீது திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தாக்குதலின் விளைவாகும்.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஒவ்வொரு வாரமும் நீதி கோரியும் இந்த இரத்தகளறிக்கு முற்றுப்புள்ளிவைக்குமாறு கோரியும் வீதிகளில் இறங்கிவருகின்ற போதிலும் உலகம் அதிகார அச்சில் சுழன்றுகொண்டேயிருக்கின்றது.
ஆனால் நம்முன்னால் உள்ள கேள்வி என்னவென்றால் இந்த குற்றவியல் தாக்குதல் முடிவடைந்த பின்னர் உலகம் முன்னர் போன்று இருக்குமா என்பதுதான்?
காசாவிற்கு பின்னர் உலகளாவிய மனித உரிமைகள் சாசனம் முதல்,விதிகள் சார்ந்த உலக ஒழுங்குவரை பொதுவான மனித குலத்தின் அடிப்படையை புரிந்துகொள்வதற்கு என்ன மிஞ்சியிருக்கும்?