அஹமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின்
குடும்பத்துக்கு இந்திய மதிப்பில் தலா ஒரு கோடி ரூபா நிவாரணம் வழங்கப்படும் என்று விபத்துக்குள்ளான Air India விமானத்தின்உரிமை நிறுவனமான Tata Group தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் முழு மருத்துவச் செலவையும் டாடா குழுமமே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் விபத்தில் சேதமடைந்த பி.ஜே. கல்லூரிக்கு புதிய கட்டடமும் கட்டித் தரப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.