மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல்,
ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது.இதற்கிடையே ஈரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதற்கிடையே ஈரான் மீது, குறிப்பாக ஈரானில் அணு ஆயுதங்கள் உள்ள இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க உளவுத்துறை சந்தேகம் தெரிவித்து வந்தது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் அது ஆபத்தாக மாறும் என டிரம்ப் நினைக்கிறார்.
அந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றால் அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமலேயே ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
அமெரிக்காவுக்கும், ஈரான் நாட்டிற்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இஸ்ரேல் உடனடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகக் கடந்த மாதம் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஈரானின் இதயமாக கருதப்படும் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் தெஹ்ரானில் மக்கள் குண்டுவெடிப்பு சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர். அந்நாட்டு அரசு தொலைக்காட்சி குண்டுவெடிப்பை உறுதி செய்துள்ளது. .
இந்த சூழலில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்தால், மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு நாங்கள் காரணமில்லை என்றும், அமெரிக்காவை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் அமெரிக்கா அறிக்கை