ட்ரம்ப் உடனான மோதலை அடுத்து எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்- தொழிலதிபர் எலான் மஸ்க் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ட்ரம்ப், எலான் மஸ்க் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவதால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ட்ரம்ப் உடனான மோதலை அடுத்து எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 150 பில்லியன் டொலர்கள் வரை சரிந்துள்ளது.
இதேவேளை எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனத்தின் பங்குகளும் சரிந்துள்ளன. மஸ்க்- ட்ரம்ப் உடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில் டெஸ்லா பங்குகள் மேலும் சரிவடையும் என முதலீட்டார்கள் கணித்துள்ளனர்.