நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற பின் கானோ நகரை நோக்கி தடகள வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் 21 தடகள வீரர்கள் உயிரிழந்தனர். சாரதியின் சோர்வு அல்லது அதிக வேகத்தின் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த ஆண்டு மட்டும் நைஜீரியாவில் 9,570 வீதி விபத்துக்களில் 5,421 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.