நிலவும் மோசமான வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம மற்றும் இரத்தினபுரி பகுதிகளுக்கு நிலை 2 இன் கீழ் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டம் 01 இன் கீழ், கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய மற்றும் களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட, அகலவத்த, பாலிந்தனுவர, புலத்சிங்கள மற்றும் மத்துகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
மேலும், கண்டி மாவட்டத்தின் கங்கை கோறளை, கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல, எஹலியகொட, நிவித்திகல, குருவிட்ட, எலபாத மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 1இன் கீழ் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
Monday, June 16, 2025
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »