இஸ்ரேல் மீதான தாக்குதல்களில் ஈரானுடன் இணைந்து
செயற்பட்டதாக யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த 24 மணிநேரத்தில் ஈரானுடன் ஒருங்கிணைந்து இஸ்ரேலின் ”Jaffa” ஜவா நகரத்தினை பல ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ஹெளத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மற்றும் ஈரானிய மக்களுக்கு வெற்றி... இந்த நடவடிக்கைஇ குற்றவாளி இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக ஈரானிய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டது ”என ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இராணுவ விவகாரங்களிற்கான தொடர்பாளர் யெஹெய்யா சரியா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் போhரின் போது ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை இலக்குவைத்து தாக்குதல்களை கொண்டதுடன் செங்கடலில் இஸ்ரேலிய அமெரிக்க கப்பல்களை இலக்குவைத்தனர் .
.இஸ்ரேலும் அமெரிக்காவும் யேமனில் உள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.