பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், முகமது யூனுஸ் தலைமையில், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 'தேசத்தந்தை' என்ற பட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது.
சமீபத்தில் புதிதாக அச்சிடப்பட்ட பங்களாதேஷின் ரூபாய் நோட்டுகளில் இருந்து முஜிபுர் ரஹ்மானின் உருவப்படம் நீக்கப்பட்டதை அடுத்து, 'தேசிய சுதந்திரப் போராட்ட கவுன்சில் சட்டத்தில்' திருத்தம் செய்ய இடைக்கால அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் ஒரு சுதந்திர நாடாக உருவாக, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அழைப்பின் பேரில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. இதன் விளைவாக பங்களாதேஷ் தனி நாடாக உருவெடுத்தது.
விடுதலை காலத்தில் பங்களாதேஷ் அரசாங்கத்தில் பணியாற்றியவர்கள், 'சுதந்திரப் போராளிகள்' என அழைக்கப்பட்டவர்கள், தற்போது இடைக்கால அரசால் 'விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள்' என மறு பெயரிடப்பட்டுள்ளனர்.
அதே வேளையில், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 'தேசத்தந்தை' பட்டம் நீக்கப்பட்டாலும், அவரது சுதந்திரப் போராட்ட வீரர் என்ற அந்தஸ்து தக்கவைக்கப்பட்டுள்ளது.