அரசாங்கம், தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறிய நிலையில், தற்போது தமது தோல்வியை மறைப்பதற்கு தீவிரமாக முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு மகாநாயக்க தேரர்களின் உதவியை நாடுவதாக அரசாங்கம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயமானது, முன்னாள் ஜனாதிபதி மீதான தாக்குதல் மாத்திரமன்றி, மதத் தலைவர்கள் மீது அரசியல் சேறு பூசும் முயற்சியாகுமெனவும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. இந்தக் கூற்றுகள் முற்றிலும் தவறானவை.
இந்தநிலையில் தாமும், தமது குடும்பத்தினரும் தொடர்ந்து அரசியல் ரீதியான நோக்கம் கொண்ட விசாரணைகளை, அச்சமின்றி எதிர்கொண்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், விசேட சலுகைகளைப் பெறாமல் நாட்டின் நீதித்துறை அமைப்பின் மீது முழுமையான நம்பிக்கையை, தொடர்ந்தும் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.