பாகிஸ்தானில் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களில் 10 குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 63 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பல பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானை பாதித்த மழை வரும் நாட்களில் பெய்யும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.