உள்ளூர் சந்தையில் போதுமான அளவு கீரி சம்பா இல்லை என்று இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியதன் அடிப்படையில், கீரி சம்பாவிற்கு பதிலாக 40,000 மெட்ரிக் தொன் மாற்று அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 5,000 மெட்ரிக் தொன் அரிசியை அரசு நிறுவனங்கள் மூலமாகவும், மீதமுள்ள தொகையை தனியார் துறை மூலமாகவும் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தில் கூடிய குழு இந்த முடிவு எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.