Our Feeds


Tuesday, June 10, 2025

SHAHNI RAMEES

தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்திற்கு தடை! - பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது

 


பலாலி  தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த

பகுதிகளில் நாளை வரை  ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 27 தரப்பினருக்கு எதிராக இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, தையிட்டி விகாரைக்கு அருகிலோ, அதன் நுழைவாயில், வீதியிலோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது எனவும் சட்டவிரோத ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ பெயர் குறிப்பிட்ட நபர்களால் நடத்தப்படக் கூடாது எனவும் நீதிமன்றின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


பலாலி காவல்நிலைய பொறுப்பதிகாரியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க நீதிமன்றினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »