இ.தொ.கா. உள்ளூராட்சி தேர்தலில் எங்கள் சொந்தக் கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டோம். எனவே எங்களுக்கு எங்களுடைய தனித்துவமான முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் உள்ளது. நான் எதிர்க்கட்சியிலேயே பணிகளை தொடருவேன். ஆனால் பொருளாதாரம் சார்ந்த விவகாரங்களில் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இது குறித்து அவருடைய முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நான் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். 2020 பொதுத் தேர்தலில் அந்த சின்னத்துக்கு மிகக் குறைந்த வாக்குகள் கிடைத்திருந்தபோதும், இது ஒரு கொள்கை அடிப்படையிலான கூட்டணியாக இருந்தது. ஏனெனில் அவர்கள் என் முன்னோர்களைப் போல் இல்லாமல் முற்றிலும் நடுநிலை சார்ந்த, முற்போக்கான நம்பிக்கைகளுடன் இணைந்திருந்தனர்.
தேர்தல்களில் மக்கள் வழங்கும் ஆணையின் அடிப்படையிலேயே உள்ளூர் நிர்வாகம் அடித்தளக் கட்டமைப்பில் ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும். இ.தொ.கா உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது வேறு எந்தக் கூட்டணியின் கீழ் போட்டியிடவில்லை. நாங்கள் எங்கள் சொந்தக் கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டோம். எனவே எங்களுக்கு எங்களுடைய தனித்துவமான முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் உள்ளது.
இரண்டாவது, நாம் தேசிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் பலமுறை கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம். எதிர்க்கட்சித் தலைவரிடம் நேர்மை இருந்தப் போதிலும். அவருடைய கூட்டணி உறவுகளுக்கு தங்களது சொந்த நோக்குகள் உள்ளன போல் தெரிகிறது.
மேலும் அழுத்தமான அரசியல் பிரச்சாரங்களை மீறி, நாம் வாக்களித்த மக்களிடம் எங்கள் தேர்தல் மதிப்பை நிரூபித்துள்ளோம். எங்கள் ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட ஆதரவை நாங்கள் நியாயமாக பயன்படுத்தியுள்ளோம் என நம்புகின்றனர்.
எனவே, நான் எதிர்க்கட்சியிலேயே பணிகளை தொடருவேன். ஆனால் பொருளாதாரம் சார்ந்த விவகாரங்களில் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வேன். இருப்பினும், உள்ளூர் நிலை கூட்டணிகள் அரசாங்கத்துக்கான புகழ்ச்சி அல்லது விமர்சனத்தில் எந்த விதமான புரிதலும் ஏற்படுத்தாது எனப் பதிவிட்டுள்ளார்.
Tuesday, June 17, 2025
தனித்துவமான முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் எங்களுக்கு உள்ளது – ஜீவன் தொண்டமான்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »