இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (05) காலை வாக்குமூலம் அளித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, சுமார் 7 1/2 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துவிட்டு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.
சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பாக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
