Our Feeds


Friday, June 27, 2025

SHAHNI RAMEES

வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆசையா? - அப்போ இது உங்களுக்கானது....

 

சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்து சம்பாதிக்க முடியும் என கூறி Face book, Whatsapp, Telegram,, We Chat போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலாம் முறைப்படி ; விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் சிறிய பணத்தொகையை முதலீடு செய்தால் அதன் ஊடாக இலாபம் பெறலாம் என சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி, சிறிய பணத்தொகையை முதலீடு செய்த நபர்களுக்கு பெருமளவிலான பணத்தை வழங்கி அதிகளவிலான இலாபத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் நம்பிக்கையை வென்ற பின்னர் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்யுமாறு கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர்.


இதனை அறியாத மக்கள் சிறிய பணத்தொகையை முதலீடு செய்ததால் கிடைத்த அதிகளவிலான இலாபத்தை நம்பி பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்து ஏமாறுகின்றனர்.

இரண்டாம் முறைப்படி ; வீட்டிலிருந்து சம்பாதிக்க முடியும் என கூறி விளம்பரங்களை பதிவிட்டு , அதன்ட ஊடாக அறிமுகமான நபர்களின் வங்கி கணக்குகளை பெற்றுக்கொண்டு அதில் பணத்தை வைப்புச் செய்து அந்த பணத்தை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்தால் பெரியளவிலான பணத்தொகை இலாபமாக கிடைக்கும் என கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இதனால் முதலாம் முறையில் குறிப்பிடப்பட்டுள்ள விளம்பரத்தின் அடிப்படையில் வங்கி கணக்குகளில் பணத்தொகையை முதலீடு செய்த நபர்களின் பணத்தை வேறு வங்கி கணக்குகளுக்கு இலகுவாக பணப்பரிமாற்றம் செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதன் ஊடாக கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றம் நிதி மோசடிகள் இடம்பெறுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.


எனவே, சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »