நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை இருப்பதாக பரப்பப்படும் போலி செய்திகளுக்கு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் தற்போது அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு உள்ளதாக எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
முன்னதாக இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் இருப்புகளை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பெற தேவையான நடவடிக்கைகள் தயாராக உள்ளதாகவும் இது தொடர்பாக பரப்பப்படும் போலிச் செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
Tuesday, June 17, 2025
பெற்றோல் பற்றாக்குறை? - எரிசக்தி அமைச்சின் அறிக்கை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »