Our Feeds


Wednesday, June 18, 2025

Sri Lanka

இஸ்ரேல் - ஈரான் போர் உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் - செந்தில் தொண்டமான்!


இஸ்ரேல் - ஈரான் போர் உலக சமாதானத்துக்கும், பொருளாதாரத்துக்கும் பெரும் ஆபத்து, உடனடியாக முடிவுக்கு கொண்டுவர ஐ.நாவும் உலக நாடுகளும் தலையிட வேண்டும் என் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் வலியுறுத்து!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் ஏற்பட்டுள்ள போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து வளைகுடா நாடுகள் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழல் மற்றும் அமைதியின்மையை போக்க ஐநாவும் உலக நாடுகள் தலையிட வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போரால் பல மில்லியன் கணக்கான மக்கள் மேற்காசிய பிராந்தியத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஈரான், இஸ்ரேல், பலஸ்தீனம் ஏமன் போன்ற நாடுகளில் தினமும் பல நூறு பேர் இறக்கின்றனர். ஈரானிலிருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

மனிதகுலம் தோன்றி பலாயிரம் ஆண்டுகளை கடந்து இன்று நாகரீகமான மற்றும் நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்ந்துக்கொண்டிருகிறது. உலகம் முழுவதும் சமாதானம் மற்றும் ஒற்றுமையை பேண சகல நாடுகளும் செயல்படுகின்றன. அதற்காகவே ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு உகலாவிய அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் - ஈரான் போர் அந்த இரு நாடுகளில் மாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதல்ல. அது ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

மேலும் இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட   வேண்டும்  எனவும் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »