ஒரே பாலின சட்டம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் கூறிய கருத்தை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார மறுத்துள்ளார்.
தன்பாலின திருமணங்களை குற்றமற்றதாக்கும் யோசனை ஒன்று, நாடாளுமன்றத்தில் இருப்பதாக இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், ஊடக சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
தன்பாலின உறவுகளை குற்றமற்றதாக்கும் யோசனையைத் தாம் வரவேற்பதாகவும், அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதைத் தாம் புரிந்து கொள்வதாகவும், உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், உயர்ஸ்தானிகர் குறிப்பிட்ட எந்தவொரு யோசனையும், குறிப்பிட்ட காலத்துக்குள் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவில்லையென்று நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெளிவுபடுத்தியுள்ளார்.